About Party

அண்ணா திராவிடர் கழகம் இந்திய அரசியலமைப்பின் மீதும் அதன் சட்ட திட்டங்களின் மீதும் அதன் அடிப்படை கோட்பாடுகளான சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை கொண்ட கட்சியாகும்.

சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே சமத்துவத்தை உருவாக்கவும், சமத்துவ ஜனநாயக சமுதாயத்தை நிலை நாட்டவும், தமிழகத்தின் தாய் மொழியான 'தமிழ்' மற்றும் திராவிடர்களின் கல்வி, கலாச்சார மேம்பாட்டிற்காகவும், ஜனநாயக கட்டமைப்பினை வளப்படுத்தவும், மாநிலங்களுக்கான அந்தஸ்தையும், சுய அதிகாரத்தையும் மேம்படுத்தவும், இந்திய துணை கண்டத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த ஊறும் விளைவிக்காத வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கழகம் செயல்படும்.

இந்திய துணை கண்டத்தில் நிலவும் பல்வேறு வகையான கலாச்சாரம், நாகரிகம், பழக்கவழக்கங்கள் மற்றும் மொழிகள் கொண்ட பாரத தேசத்தின் தேசிய உணர்வையும், நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் வளர்க்க கழகம் பாடுபடும்.

மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தூய்மையான சுற்றுச்சூழல், மாசற்ற மண்வளம், திறன் சார்ந்த மனிதவளம், எதிர்கால சந்ததியினருக்கு உரிய வேளாண்மை, தொழிற்சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை மேம்பட செய்வதற்காக வழிமுறைகளை எடுத்துரைத்து சமுதாயம் மேம்பட கழகம் பாடுபடும்.

மாநிலங்களுக்கிடையே அரசியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சிக்குத் தேவையான சமவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சுமூகமான ஒற்றுமையை வலியுறுத்தவும் கழகம் பாடுபடும்.

The objects of the Party will be to strive to foment and forge a sense of Unity among the people of diversified culture, civilization, traditions and languages inhabiting this Indian subcontinent with the vision of Nationalism and to create a sense of oneness as Indians.

The party takes initiative to induce, instruct, educate, disseminate, promote and propagate the need of quality of life and high living standards to all the stake holders of the society through clean environment, unpolluted soil and skilled human resource, sustained development in agriculture, industry and business.