Event

முனைவர் திவாகரன் கட்சி பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார்

Sat Jun 09 2018 மன்னார்குடி

அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் திவாகரன் அவர்கள் கட்சி பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதோடு கட்சி கொள்கைகளையும், பெயர் விளக்கம், கொடியின் சிறப்பம்சம் முதலானவற்றை விவரித்தார்.

அண்ணா திராவிடர் கழகம் இந்திய அரசியலமைப்பின் மீதும் அதன் சட்ட திட்டங்களின் மீதும் அதன் அடிப்படை கோட்பாடுகளான சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை கொண்ட கட்சியாகும்.

சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே சமத்துவத்தை உருவாக்கவும், சமத்துவ ஜனநாயக சமுதாயத்தை நிலை நாட்டவும், தமிழகத்தின் தாய் மொழியான 'தமிழ்' மற்றும் திராவிடர்களின் கல்வி, கலாச்சார மேம்பாட்டிற்காகவும், ஜனநாயக கட்டமைப்பினை வளப்படுத்தவும், மாநிலங்களுக்கான அந்தஸ்தையும், சுய அதிகாரத்தையும் மேம்படுத்தவும், இந்திய துணை கண்டத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த ஊறும் விளைவிக்காத வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கழகம் செயல்படும்.

இந்திய துணை கண்டத்தில் நிலவும் பல்வேறு வகையான கலாச்சாரம், நாகரிகம், பழக்கவழக்கங்கள் மற்றும் மொழிகள் கொண்ட பாரத தேசத்தின் தேசிய உணர்வையும், நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் வளர்க்க கழகம் பாடுபடும்.

அண்ணா என்பது அனைத்து திராவிடர் தலைவர்களையும் சுட்டுவதாகவும். மனித வலிமை (சிவப்பு நிறம்), சமாதானம் மற்றும் அறிவு (வெள்ளை நிறம்), மூலம், நமது சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அவலங்களை (கருப்பு நிறம்) நீக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சமநிலையான வளர்ச்சிப் பாதைக்கு தமிழகத்தை அழைத்துச் செல்லல் என்ற கட்சியின் நோக்கத்தை கட்சிக்கொடி பிரதிபளிக்கிறது.

நட்சத்திரத்தின் ஐந்து முனைகள் நமது திராவிட தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா மற்றும் திராவிடம் சிறக்கப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களைக் குறிக்கின்றது.

Dr V Dhivaharan unveils Party Name and Flag

Sat Jun 09 2018 Mannargudi

Anna Dravidar Kazhagam’s General Secretary Dr. V. Dhivaharan unveils Party Name and Flag at Mannargudi, Thiruvarur.

The objects of the party and the symbolization of the flag are mentioned below.

The objects of the Party will be to strive to foment and forge a sense of Unity among the people of diversified culture, civilization, traditions and languages inhabiting this Indian subcontinent with the vision of Nationalism and to create a sense of oneness as Indians.

The party takes initiative to induce, instruct, educate, disseminate, promote and propagate the need of quality of life and high living standards to all the stake holders of the society through clean environment, unpolluted soil and skilled human resource, sustained development in agriculture, industry and business. The party will strive to achieve through.

The name Anna represents every Dravidian leader. This is also to recognize countless People who have contributed for Dravidian cause yet didn’t receive sufficient recognition.

The message conveyed through the flag is to overcome the inequalities and the dark sides of the society (represented by the black stripe) through human strength (represented by the red stripe), knowledge and peace (represented by the white stripe) and achieve a sustainable development that is conducive to our environment (represented by the green color).

The Five points of the star represents the 4 major Dravidian leaders (Periyar, Anna, MGR and Amma), and the other arm symbolizes countless people who have contributed for Dravidian cause yet didn’t receive sufficient recognition.