Event

ஜெய்ஆனந்த் திவாகரன் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Fri Sep 14 2018 சென்னை

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 110-வது பிறந்தநாளில் அண்ணாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அண்ணா திராவிடர் கழக இளைஞர் மற்றும் மாணவர் அணி செயலாளர் திரு. ஜெய்ஆனந்த் திவாகரன். அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் திரு.திவாகரன். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மடை திறந்த வெள்ளமாக பேசுகின்ற ஆற்றலுடன் தமிழகம், இந்தியாவை கடந்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் வரை சென்று தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டில் சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கியவர். இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழுக்கு மென்மேலும் பெருமை சேர்த்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேசி மாற்றுக் கருத்துக்கொண்ட வரையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளம் கொண்டவராக திகழ்ந்தவர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தின் படி அண்ணா வழியில் நாமும் பயணிப்போம். அதுதான் அண்ணாவுக்கு நாம் சேர்க்கும் பெருமையாகும்.

Jeyanandh Dhivaharan pays tribute to Arignar Anna at his birth anniversary

Fri Sep 14 2018 Chennai

Anna Dravidar Kazhagam Youth and Student Wing Secretary Jeyanandh Dhivaharan pays tribute to Arignar Anna on his 110th birthday. Arignar Anna one of the founding fathers of Dravidian movement and a patron scholar in Tamil Literature who proved his merit in India and abroad. He led Anti-Hindi agitation and subsequently named Madras Presidency into Tamil Nadu. A brilliant statesman, a scholar whose watchwords were "Duty Dignity Discipline" and to pay tribute to his legacy is by adhering to the values and principles he stood for and fought for his whole life.